இந்து மாமன்றம் ரூகலாண்ட்

Hindu Mamanram Rogaland


அந்தியகால சேவை

நோர்வே நாட்டின் சட்ட திட்டங்களுக்கு இணங்க நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும்

இந்து சமய கோட்பாடுகளுக்கு அமைவாகவும் அந்தியகாலக் கிரிகைகளை ஏற்பாடு செய்து

கொடுப்பதற்கு அனுசரணையாளர் நிறுவனங்களுடன் இந்து மாமன்றம் தொடர்புகளை

ஏற்படுத்தி அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துகொண்டுள்ளது.

இறந்தவரின் அல்லது உறவினரின் விருப்பத்தின்படி அந்தியக்கிரிகைகளை

நிகழ்த்திக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் உடலை

உலகின் எப்பாகத்திற்கும் அனுப்பி வைக்கும் வசதிகளும் உண்டு.


இச்சேவையில் நீண்டகால அனுபவமுள்ள Obed AS நிறுவனத்தினர் எம்மால்

தெரிவுசெய்யப்பட்டு அவர்களிடம் இவ்வரிய பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறந்த தொழிநுட்பத்தையும் இடவசதிகளையும் இந்த ஸ்தாபனம் பெற்றுள்ளதுடன் எமது

பிரதேசத்தில் வேற்றுக்கலாச்சார முறைகளைப் பின்பற்றும் மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு

சேவையாற்றும் ஒரு முன்னணி நிறுவனமாகவும் இது விளங்குகின்றது.

http://obed.no


இந்து மாமன்றத்தின் முயற்சியால் எமது அங்கத்தவர்களுக்கென அரச அனுசரணையுடன்

தனியான ஒரு இந்து மயானப்பிரிவு இஸ்தவங்கர் பிரதேசத்தில் உள்ள Jåtten நகர் பகுதியில்

நிர்மாணிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டிலிருந்து பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

இந்து மயானத்தின் சில காட்சிகள்