இந்து மாமன்றம் ரூகலாண்ட்

Hindu Mamanram Rogaland



சிரமதான சேவை பற்றிய அறிவித்தலும் விளக்கமும்

1. இந்த அறிவித்தலின் நோக்கம்:

வாரத்துன் கோர்ட் நிலையத்தில் நத்தார் சந்தை நாட்களில் நாம் செய்ய இருக்கும் சிரமதானசேவை பற்றிய சில முக்கிய விபரங்கள் இங்கு விளக்கமாக தரப்பட்டுள்ளது. சிரமதான தொண்டர்கள் தமது சேவையில் இணைந்துகொள்ள வரும்போது தமது பொறுப்புகள், கடமைகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு பணியாளரும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்ன என்பதை சரியான முறையில் விளங்கிக் கொண்டு தடையின்றியும் ஈடுபாட்டுடனும் தனது சேவையை வழங்க வேண்டும் என்பதே இவ்வறிவித்தலின் பிரதான நோக்கமாகும்.


கடந்த ஆண்டு போல் இவ்வருடமும் நத்தார் சந்தை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 வார இறுதி நாட்களில் நடைபெறும். இதற்கான திகதி, நேரம் போன்ற விபரங்கள் கீழே உள்ள அட்டவணையில் காணலாம். நத்தார் சந்தையின்போது நிலையத்துக்கு வரும் வாகனங்களின் போக்குவரத்தைக் கண்காணித்து அவை நிறுத்தப்படும் தரிப்பிடங்களை மேற்பார்வை செய்வது சிரமதான பணியாளர்களின் கடமையாகும். வாரத்துன் கோர்ட் மண்டபத்தை இந்து மாமன்றத்தின் கோவிலுக்கும் கூட்டங்களுக்கும் இலவசமாக பயன்படுத்துவதற்கு பிரதி உபகாரமாகவே இச் சேவையை வருடம்தோறும் நாம் வாரத்துன் கோர்ட் நிலையத்திற்கு சிரமதான அடிப்படையில் வழங்கி வருகிறோம்.

 

2. சேவைக்கான திகதி, நேரம் மற்றும் பணியாளர் அட்டவணை:

நத்தார் சந்தை நடைபெறும் 3 நாட்களிலும் எமக்கு வழக்கப்பட்ட  சேவை நேரம் தினமும் ஏறத்தாழ 6 மணித்தியாலங்கள். இந்த 6 மணித்தியாலங்களை நாம் ஒவ்வொன்றும் 3 மணிநேரதைக்கொண்ட இரண்டு தவணைகளாக பிரித்து அதில் ஒவ்வொன்றிற்கும்  6 பணியாளர்களையும் அதிலுள்ள ஒருவரை பொறுப்பாளராகவும் சேவையில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கு ஆகக்கூடியது 3 மணித்தியாலங்களுக்கு மேல் சேவை செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது. கடந்த ஆண்டுகளில் இச்செயல்முறை பரீட்சிக்கப்பட்டு சிறந்த பலனை தந்தது பலரும் அறிந்ததே.

 திகதி 16.11.2018
வெள்ளி
16.11.2018
வெள்ளி
 17.11.2018
சனி
17.11.2018
சனி
 18.11.2018
ஞாயிறு
18.11.2018
ஞாயிறு
 நேரம்15:30 - 17:45
17:45 - 20:00
10:00 - 13:00
13:00 - 16:00
 10:00 - 13:0013:00 - 16:00
பணியாளர் 1
ஜெயசீலன்
(91390317)
காஞ்சனா
(47255563)

திருலோகநாதன்
(95015592)

அயிலன்
(98829486)

அரவிந்த்
45251431)

ஜசிந்தா
(47509179)

பணியாளர் 2
ரவிகாந்தன்
பாலசங்கர்
அரவிந்த்
பொனிபஸ்
காண்டீபன்
பாலச்சந்திரா
பணியாளர் 3
ஜெகதீஸ்வரன்
தெய்வா
பிரேமராசா ஸ்ரீதரன்
செந்தூர்செல்வி
கலானந்ததேவி
பணியாளர் 4
யோகராஜா
திருலோகநாதன்
மாலா
பாலரஞ்சன் அவினாஷ்
மணிவாசகன்
பணியாளர் 5
அயிலன்
இலம்போதரன்
ஆனந்தன்
தெய்வாகபிஷன்
நிர்மலினி
பணியாளர் 6
காண்டீபன்
சுபத்திரா
விஜேய்
பாலசங்கர்
மதுஷன்
உதயமூர்த்தி
பணியாளர் 7




நிதுஷன்
இணைப்பாளர்  ஈஸ்வரன்
ஈஸ்வரன்
ஈஸ்வரன்
ஈஸ்வரன்
ஈஸ்வரன்
ஈஸ்வரன்

3. சிரமதான குழு பொறுப்பாளரின் முக்கிய கடமை என்ன?:

மேற்படி  6 பணியாளர்களில் ஒருவர் குழுவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏதாவது காரணங்களுக்காக நீங்கள் வாரத்துன் கோர்ட் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்களில் குழு பொறுப்பாளர் ஊடாகவே அவர்களை தொடர்பு கொள்ளவேண்டும்.  சேவை நேரம் ஆரம்பமாவதற்கு முன்பாக ஒவ்வொரு  பணியாளர்களின் பொறுப்புகள்  என்ன என்பதை தீர்மானித்து அவர்களுக்கு வேண்டிய தொலை தொடர்பு சாதனங்களை வழங்கி அவர்களை உரிய இடத்தில் சேவைக்கு நிறுத்துவது குழு பொறுப்பாளரின் கடமையாகும். பொறுப்பாளர் அவ்வப்போது பணியாளர்களை தொடர்புகொண்டு அவ்விடத்திலுள்ள நிலைமை பற்றி விசாரித்து  தேவையானால் அவர்களுக்கு மேலதிக உதவியை ஏற்பாடு செய்வார்.

 

4. சென்ற ஆண்டிலிருந்து  நடைமுறைப்படுத்தப்படும் சில புதிய ஒழுங்குகள்:

சில மாற்றங்கள் கடந்த ஆண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது எமது சிரமதான சேவைக்கான கண்காணிப்பு பிரதேசத்தில் உள்ள  முக்கிய பாதையான Varatunhagen என்ற தெருவில் புதிதாக பல இடங்களில்  "வாகனங்கள் நிறுத்தக்கூடாது" என்ற குறியீட்டுப் பலகைகள் பொருத்தப்படும். அத்துடன் சென்ற ஆண்டில் 5 பேர்களுடன் மட்டும் சேவை செய்த எமது பணியாளர் குழுவை  இவ்வருடம் 6 பேர்களாக அதிகரித்துள்ளோம். இதனால்  எமது வேலைப்பழுவை கணிசமான அளவு குறைக்க  முடியும்  என்பது  எமது நம்பிக்கை.

 

5. பணியாளர்கள் சேவை செய்யும் இடம்:

வாரத்துன் கோர்ட் நிலையத்தை ஊடுருவியபடி சுமார் 600 மீட்டர் நீளமான  varatunhagen என்ற தெரு வடக்கில் இருந்து தெற்காக செல்கிறது. இப்பாதை ஒடுக்கமானதாக இருப்பதாலும் குடிமனைகளையும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் ஒன்றைக்  கொண்டிருப்பதாலும்  வாகனங்களின் போக்குவரத்து இங்கு  மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இது தவிர வடக்குத் திசையில் பாதைக்கு சமாந்திரமாக பாதசாரிகளுக்கும்  துவிசக்கர வண்டிகள் செல்வதற்கும் ஏற்படுத்தப்பட்ட  தனியான பாதை  ஓன்று அமைந்திருப்பதையும் காணலாம்.

 

Varatunhagen தெருவில் பெரிய வாகனங்களின் போக்குவரத்தை தடைசெய்து பாதசாரிகளுக்கும் துவிச்சக்கர வண்டிகளுக்கு மட்டும்  வழிவிட்டு  பாதைக்கு குறுக்காக தடை வேலி ஒன்று போடப்பட்டுள்ளது. நத்தார் சந்தை  நடைபெறும் நாட்களில் மட்டும்  இந்தத்  தடைவேலி  அகற்றப்பட்டு  வீதியின் வட முனையிலுள்ள சந்தி வழியாக வரும் வாகனங்கள் தொடர்ந்து சென்று தென் முனையிலுள்ள Varatunveien வழியாக வெளியேறிச் செல்ல இந்த வீதி ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு திறந்துவிடப்படும்.

 

இப்பாதையில் எங்குமே வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதியில்லை. ஆனால்  பாதைக்கு வெளியே எங்காவது இடவசதி இருந்தால் மட்டும் போக்குவரத்துக்கு எதுவித இடையூறும் இல்லாமல் வாகனங்களை நிறுத்தி வைக்க  அனுமதி உண்டு. இந்த நடைமுறையில் என்னென்ன விதிவிலக்குகள் உண்டு  என்பதை குழு பொறுப்பாளர் சேவை நாளில் அனைவருக்கும் அறிவிப்பார்.

 

Varatunhagen வீதியின் தொடக்கத்தில் "ஒருவழிப்பாதை" (Enveiskjøring) என்ற அடையாளமும் அதன் முடிவில் "வாகனங்கள் கடந்து செல்ல தடை" (Gjennomkjøring forbudt) என்ற அடையாளமும் பொருத்தப்பட்டிருக்கும். இது தவிர வீதியில்  இடையிடையே "வாகனங்கள் நிறுத்தக்கூடாது" (Parkering forbudt) என்ற அடையாளமும் காணப்படும். Varatunhagen வீதியின் தென்முனையில் Varatunveien வழியாக அடையாள அட்டையுடன் வரும் வீட்டு சொந்தக்காரர்கள் மட்டுமே இந்த வீதியில்  எதிர் திசையில் வாகனங்களை  செலுத்தி  தமது வீடுகளுக்கு  செல்ல அனுமதிக்கப்படுவர்.

 

6. பணியாளர்களின் கடமைகளும் பொறுப்புகளும்:

வாரத்தூன்  கோர்ட்டுக்கு சொந்தமான வாகன தரிப்பிடம் நிலையத்துக்கு அருகே அதன் பின்புறமாக உள்ளது. மிகச் சிறிய எண்ணிக்கையான வாகனங்களுக்கு மட்டுமே இந்த இடம் போதுமானதாக இருப்பதால் சந்தைக்கு வரும் வாகனங்களில் பெரும்பாலானவற்றை  சுற்றுச் சூழலில் உள்ள வேறு தரிப்பிடங்களுக்கு திருப்பிவிடுவதும் எமது கடமையாகும். எனவே சுற்றுச்சூழலில் உள்ள தரிப்பிடங்கள் எவை  என அறிந்து வைத்திருப்பதும் அவசியம். குறிப்பாக Sandnes Ulf விளையாட்டு மைதானம், Giske ungdomskole என்பவவற்றை குறிப்பிடலாம். Varatunhagen வீதியில் செல்லும் வாகனங்கள் வீதியில் தெற்குப்பக்கமாக வெளியேறி இந்த இடங்களை இலகுவாக சென்றடையலாம். இந்த வாகனத் தரிப்பிடங்களிலும் இடநெருக்கடி ஏற்படுமாயின் வாகனங்களை வீதி ஓரமாக நிறுத்துவதற்கான  வசதிகள் அவ்விடங்களில் உண்டு.

 

7. அவசரகால நிலைமை ஏற்பட்டால் பணியாளர்களின் கடமைகள்:

அவசர கால நிலைமை ஓன்று எற்படும் பட்சத்தில் வாரத்துன்  கோர்ட்  நிலைய பொறுப்பாளர்கள் சிரமதான  குழு பொறுப்பாளரை தொடர்பு கொண்டு எமது பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக அறிவுறுத்துவார்கள்.

 

தீவிபத்து அல்லது முதலுதவிக்கான தேவையுடன்  ஒரு  அவசர கால நிலைமை ஏற்படுமாயின்  அபாய அறிவிப்பு கிடைத்தவுடன் பணியாளர்கள் அனைவரும் குறிப்பாக Varatunhagen வீதியின் வடமுனையில் சேவைசெய்யும் பணியாளர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக Varatunhagen பாதையில் போக்குவரத்தை உடனடியாக தடை செய்து  அங்கு புதிய வாகனங்கள் உட் செல்லாமலும் பாதையில்  இடைஞ்சலாக உள்ள ஏனைய வாகனங்களை விலகும்படி உத்தரவிட்டும்  தீயணைப்பு, போலீஸ் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் தொடர்ந்து செல்ல  தடையற்ற பாதையை  ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும்.

 

பாதிக்கப்பட்ட இடங்களை வேகமாக சென்றடைவதற்கு  தீயணைப்பு, போலீஸ் மற்றும் அம்புலன்ஸ் வாகனங்கள் பணியாளர்கள் சேவை செய்யும் பகுதிகளில்  நடைமுறையிலுள்ள போக்குவரத்து விதிகளை  மீறும் சந்தர்ப்பம் ஏற்படலாம் என்பதையும்  கவனத்தில் கொள்ளவும். பணியாளர்கள் சேவையின்போது  குறிப்பாக அவசர கால நிலைமைகளில் தனதும் மற்றவர்களினதும் பாதுகாப்பை  கருத்தில் கொள்வது  மிகவும் முக்கியம். 


8. நினைவில் வைக்கவேண்டிய சில முக்கிய குறிப்புகள்:

1. வாரதூன்  கோர்ட் நிலையத்தின் பின்புறமாக வாகன தரிப்பிடத்தை நோக்கியபடி சாய்தளத்துடன் கூடிய ஒரு வாசல் உள்ளது. இந்த வாசல் ஒரு அவசரகால கதவு என்பதால் இவ்வாசலை இடையூறு செய்தபடி தரிப்பிடத்தில் வாகனங்கள் எதுவும் நிறுத்திவைக்கக் கூடாது.

 

2. மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனத்தரிப்பிடத்தின் தெற்கு மூலையில் ஒதுக்கப்பட்டுள்ள தனியான  வாகன தரிப்பிடங்களை சாதாரண வாகனங்களுக்கு பயன்படுத்தக் கூடாது. இந்த இடத்தில் 2 வாகனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அங்கு 3 வாகனங்களை நிறுத்த முடியும்.

 

3. மழை காரணமாக புல்வெளிகளில் சதுப்புத் தன்மை காணப்படால் அவ்விடத்தை நோக்கி வாகனங்களை அனுப்பவேண்டாம். அனுமதியை மீறி அங்கு செல்லும் வாகனங்கள் சேற்றில் புதையும் சந்தர்ப்பங்களில் அவர்கள் எமது உதவியை எதிர்பார்க்க முடியாது.

 

4. தரிப்பிடத்தில் நிறுத்தியபின் திரும்பிச்செல்லும் வாகனங்கள்  Varathunhagen வீதியில் வடக்கை நோக்கி திரும்பி பயணித்து வெளியேற அனுமதிக்கவேண்டாம். மேற்படி வீதியில் போகும் அனைத்து வாகனங்களும் அதே வீதியில் தொடர்ந்து பயணித்து தெருவின் தென்கோடியிலுள்ள  Varatunveien வீதி வழியாகவே வெளியேறவேண்டும்.

 

5. பெரும்பாலும் பணியாளர்கள் தனித்தனியாக நின்றுகொண்டு  கடமையாற்றுவார்கள் ஆதலால் அனைத்து பணியாளர்களும் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். உபகரணங்களில் பிழை இருந்தால் உடனடியாக நிலைய அலுவலகம் சென்று அதை  சரிசெய்துகொள்ளவும்   அல்லது மாற்றித்  தரும்படி கேட்கவும். தினமும் சேவை முடிந்தவுடன் அனைத்து தொலைத்தொடர்பு உபகரணங்களையும்  பாட்டரி சார்ஜ் செய்யும் உபகரணத்தில் பொருத்தி அவற்றை .அடுத்தநாள் பாவனைக்கு தயார்நிலையில் வைக்கவும்.

 

6. பணியாளர்கள் தமக்கு வழங்கப்பட்ட கடமையை செய்ய முடியாதபடி இடைநடுவில் ஏதாவது இடைஞ்சல்கள் தடைகள் ஏற்படின் அல்லது தமது கடமையை மேலும் சிறப்பாக செய்வதற்கான உபாயங்கள் அல்லது புதிய வழிமுறைகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக குழு பொறுப்பாளருடன் அதுபற்றி ஆலோசிக்கவும்.

 

7. வாகன தரிப்பிடத்தில் நின்று நோக்கும்போது Varatun Gård நிலைய கட்டிடத்திற்கு பின்புறம்  பாதசாரிகளின்  பாதைக்கு அருகாமையில் உள்ள முதலாவது வாகன நிரையில் வாகனங்கள் நிறுத்தப்படும் திசையில் மாற்றம் செய்யவும். முடிந்தால் 45 பாகையில் அல்லது 90 பாகையில் வாகனங்களை நிறுத்தினால் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை அங்கு நிறுத்த முடியும். வழமையாக இந்த இடத்தில் 3-4 வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டும் இடங்கள் கோடிட்டு குறிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கவும்.

 

8. நிலையத்திற்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கென 3 - 5 வாகன தரிப்பிடங்களை நிலையத்துக்கு மிக அருகில் உள்ள இடமொன்றில் ஒதுக்கி வைக்கவும். பிரமுகர்கள் வரும்போது நிலையத்தின் வழமையான வாகன தரிப்பிடத்தில் சேவையில் நின்றுகொண்டிருக்கும் பணியாளர் அதுபற்றி  அறிந்து நிலையத்தின் பிரதான வாசலில் நிற்கும் பணியாளரை  தொடர்பு கொண்டு கேட்டபின் அதன் பின்னர் அவருக்கு இடம் வழங்கவும்.

ஏனெனில் நிலையத்தின் முன்பக்கம் வந்த வாகனங்களை மீண்டும் பின்பக்கத்தை நோக்கி  செல்லும்படி ஒருவழி பாதைக்கு எதிர் திசையில் அனுப்பமுடியாது.


9. சிரமதான குழுவின் பொறுப்பாளர் வாரதுன் கோர்ட் நிலையத்தின் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டியவர் என்பதனால் அவர் பிரதான வாயிலில் கடமைபுரிவது நடைமுறைக்கு மிகவும் சாதகமானது.


10. Varatunhagen வீதியின் வடமுனை  3 தெருக்கள் கொண்ட ஒரு முற்சந்தி ஆகும். இச்சந்தியின் வலப்புறம் Ståle Kyllingstad வீதியும்  இடப்புறம் Dyre Vaas வீதியும் உள்ளன.


சிரமதான பணியாளர்கள் சேவை செய்யும் வாகன தரிப்பிடத்தையும் Varatunhagen, Varatunveien, Ståle Kyllingstad vei, Dyre Vaas vei ஆகிய முக்கிய தெருக்களையும்  கூகுள் வழியாக சென்று காணலாம்.