திருவிளக்குப் பூஜை என அழைக்கப்படும்

ஸ்ரீ வரலக்ஷ்மி அம்பாளின் விரதபூஜை எதிர்வரும் 24.08.18 ஆம் திகதி வெள்ளி மாலை 6:30 மணிக்கு வாரதுன் கோர்ட் மண்டபத்தில் கொண்டாடப்பட உள்ளது.


   இவ்வழிபாடு வழமைபோல்  பொது உபயமாக

நிகழ இருப்பதால் பூஜை நைவேத்தியங்கள் மற்றும்

பூஜைப் பொருட்கள் என்பன அடியார்களிடமிருந்து  எதிர்பார்க்கப்படுகின்றன. உபயம் வழங்க விரும்புவோர் இந்த இணையத்தளத்தில் உள்ள தொடர்பு பக்கத்தின் வழியாக அல்லது நேரடியாக எமது மின்னஞ்சலுக்கு  தங்கள் உபயம் பற்றிய விபரங்களை எமக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 


   இப் பூஜையில்  கலந்துகொள்ள விரும்பும் பெண்கள் முன்னதாகவே தமது பெயர் விபரங்களைத் தந்து உங்கள் இடங்களை பதிவுசெய்து கொள்ளலாம். அதனால் பூஜைக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்வதற்கும் பூஜைப் பொருட்களை தேவையான அளவு முன் கூட்டியே வெளியூரிலிருந்து தருவித்துக் கொள்வதற்கும் இலகுவாக இருக்கும்.


   பூஜை மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகும் ஆதலால் ஆயத்தவேலைகளில் முன்னின்று உதவ விரும்பும் அடியார்கள் குறிப்பாக மகளிர்,  பூஜை வழிபாடுகள் தொடங்குவதற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மண்டபத்திற்கு வந்து ஆயத்தப் பணிகளில் கலந்துகொள்ளவும். 


   விளக்குத் திரியிடுதல், பூச்சரம் கட்டுதல், கோலம் போடுதல், தோரணம் சோடனை முதலான இதர அலுவல்களிலும் நீங்கள் உங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்க முடியும். மண்டபத்தில் பூஜை நிகழும் இடத்தை ஒழுங்கு செய்யும் பணிக்கும் உதவி தேவைப்படுகிறது. 

 


   அத்துடன் இந்த பூஜையை சிறப்பான முறையில் நிகழ்த்துவதற்கு உங்கள் அனைவரது  ஆலோசனையும்  வழிகாட்டலும் இன்றியமையாதது என்பதுடன் உங்களால் முடிந்த வரை 

ஸ்ரீ வரலக்ஷ்மி அம்பாளின் புகழைத் தேவாரம், பஜனைப் பாடல்கள்,  சிற்றுரை  என்பனவற்றின் மூலம் ஏனைய அடியார்களுக்கு எடுத்துரைக்கவும் நீங்கள் முன்வரலாம்.


பூஜையில் பங்குபற்றும் பெண்கள்  வீட்டிலிருந்து எடுத்து வரவேண்டிய பொருட்களின் பட்டியல் பின்வருமாறு:

வரலக்ஷ்மி அல்லது அம்பாளின் திருவுருவப் படம்.

சிறிய குத்துவிளக்கு.

தட்டம் அல்லது வாழை இலை.

தண்ணீர் வைக்க உலோகத்திலான சிறிய  கிண்ணம்.

உலோகத்திலான சிறிய  கரண்டி.

குத்துவிளக்கிற்கு தேவையான விளக்குத்திரிகள்.

ஒரு சிமிழில் குங்குமம்.

உலுர்த்திய மலர்களுடன் ஒரு தட்டம் அல்லது பை.

உங்கள் குத்துவிளக்கிற்கு சூட்ட சிறிய மலர்ச்சரம்.

குத்துவிளக்கின் மேல் வைக்க பெரிய  மலர் ஓன்று.

கட்டி மஞ்சல்.

ஒரு வாழைப்பழம்.

சில்லறைக் காசு (மண்டபத்தில் பணம் மாற்றலாம்).

கை துடைக்க துவாய்.

இருக்கைக்கு துணி விரிப்பு அல்லது சிறிய பாய்.


பூஜை மண்டபத்தில்  தரப்படும் பொருட்கள்:

மஞ்சள் மாவில் பிடித்த  பிள்ளையார்.

கேசரி - இனிப்புப் பதார்த்தம்.

விளக்கு எரிக்க எண்ணெய்.

வெற்றிலை.

சந்தனக் குச்சி.

விபூதி / சந்தனம்.

அறுகம் புல்.